டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தாலும், சில இளைஞர்களின் அத்துமீறல்கள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோய்டாவின் பர்த்தலா மேம்பாலத்தில் சிவப்பு நிற எம்.ஜி ஹெக்டர் காரில் வந்த இரு இளைஞர்கள், அருகில் சென்ற காரில் இருந்த பெண்களை நோக்கி அநாகரீகமான சைகைகளைச் செய்ததோடு, அவர்களுக்குப் பறக்கும் முத்தங்களை வீசித் தொல்லை கொடுத்துள்ளனர்.
நீண்ட தூரம் அந்தப் பெண்களின் காரைப் பின்தொடர்ந்து சென்று அவர்கள் செய்த இந்த அருவருப்பான செயல் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நோய்டா போலீசார் உடனடியாகச் செயல்பட்டு சிசிடிவி மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட அமித் குமார் மற்றும் அபிஷேக் ஆகிய இரு இளைஞர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. செக்டார் 135 பகுதியில் வசித்து வந்த இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Noida nights just got creepier: Boys in red MG Hector chase a family car, blow flying kisses & throw obscene gestures like it’s entertainment.
These entitled clowns think roads are their playground time for @noidapolice to teach them real consequences.
Zero tolerance for… pic.twitter.com/X3bLdWmcbq
— Being Political (@BeingPolitical1) February 1, 2026
“>
பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இது போன்ற நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
