ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்குப் பல விசித்திரமான அனுபவங்கள் ஏற்படுவதுண்டு, ஆனால் சமீபத்தில் வைரலான இந்த வீடியோ பலரையும் அதிர வைத்துள்ளது. ஒரு பெண் உணவு ஆர்டர் செய்துவிட்டு, அதை டெலிவரி செய்ய ஒரு சுடுகாட்டிற்குள் வருமாறு அந்த ஊழியரை அழைத்துள்ளார்.

அந்த ஊழியர் பயந்துபோய் உணவை நுழைவு வாயிலிலேயே பெற்றுக் கொள்ளுமாறு கெஞ்சியபோதும், அந்தப் பெண் உள்ளே வந்துதான் கொடுக்க வேண்டும் என பிடிவாதம் பிடித்துள்ளார். இதனால் மிகுந்த சங்கடத்திற்குள்ளான அந்த ஊழியர், இறுதியில் அந்த ஆர்டரை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் நிலையில், பலரும் அந்தப் பெண்ணின் செயலை விமர்சித்து வருகின்றனர். அந்தப் பெண் தனது நண்பர்களுடன் சுடுகாட்டில் பார்ட்டி செய்து கொண்டிருப்பதாக போனில் பேசியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by OBITO • SARCASTIC CULTURE (@oc_.alpha.sp)

“>

சிலர் இது ஒரு ‘பிராங்க்’  வீடியோவாக இருக்கலாம் எனக் கருதினாலும், நள்ளிரவில் ஒரு உழைப்பாளியை இது போன்ற பயமுறுத்தும் இடத்திற்கு வரவழைப்பது கண்டிக்கத்தக்கது எனப் பலரும் அந்த டெலிவரி ஊழியருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.