விமானிகள் இருவர் விமானத்தின் ஜன்னலை மிகவும் சாதாரணமாக வெளியே குனிந்து துடைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், தரைதளத்தில் நின்றுகொண்டிருக்கும் விமானத்தின் காக்பிட் ஜன்னல் வழியாக ஒரு விமானி வெளியே வந்து, ஒரு கையில் தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு ஜன்னலில் ஊற்றி, மற்றொரு கையால் கைக்குட்டையைப் பயன்படுத்தித் துடைக்கிறார்.
இது எந்த விமான நிலையம் அல்லது எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரியவில்லை என்றாலும், விமானிகள் இவ்வளவு எளிமையாகச் செயல்படுவது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளப் பயனர்கள் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “40,000 அடி உயரத்தில் பறக்கும்போது கறையைத் துடைக்க ஜன்னலைத் திறக்க முடியாது, அதனால் இப்போதே துடைப்பது நல்லது” என்று சிலர் நகைச்சுவையாகக் கூறியுள்ளனர்.
Pilots, do you clean your windshield, or do you call for maintenance? pic.twitter.com/IROOFhuWYx
— Turbine Traveller (@Turbinetraveler) January 31, 2026
“>
அதே சமயம், “இது பராமரிப்புப் பிரிவினரின் வேலை, விமானிகள் ஏன் இதைச் செய்கிறார்கள்?” என்றும், “பராமரிப்புப் பணியாளர்கள் பிஸியாக இருக்கும்போது அவர்களுக்கு உதவுவதற்காக விமானிகளே இப்படிச் செய்வது பாராட்டுக்குரியது” என்றும் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன.
