உத்தரப் பிரதேசம், கான்பூர் மத்திய ரயில் நிலையத்தில் பயணிகள் குழுவொன்று டிக்கெட் பரிசோதகரை (TT) கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ரயில்வே துறையின் காவல்துறைக்கும் பெரும் சவாலாக அமைந்த இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சம்பவத்தைக் காண்பிக்கும் வீடியோவில், TT ஒருவர் சிலர் கூட்டமாக தாக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன.

சூரத்திலிருந்து முசாபர்பூர் நோக்கி செல்லும் ரயிலில் பயணித்த 15 முதல் 20 பேர்கள் கொண்ட குழுவினர், டிக்கெட் இல்லாமல் சவாரி செய்ததாக கூறப்படுகிறது. இதைப் பற்றிய விசாரணையின் நடந்த போது TT அவர்கள் பயணிகளைத் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக பெண்கள் பெட்டியில் நுழைய முயன்றவர்களை TT தடுத்ததால், குழுவினர் ஆத்திரமடைந்து அவரை தாக்கினர். அந்த நேரத்தில் சிலர் அவரை அடிப்பதையும், மற்ற சிலர் தடுக்க முயற்சிப்பதையும் வீடியோவில் காணலாம்.

“>

 

சம்பவம் தொடர்பான புகாரினை அடிப்படையாகக் கொண்டு ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். TT மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்ற தகவல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக ஊடகங்களில் எழுந்து வருகிறது.

இது போன்ற சம்பவங்கள், ரயில்வே பணியாளர்களின் பாதுகாப்பை பெரும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. எனவே பாதுகாப்பு பணிகளில் அதிகப்படியான போலீசாரை நியமிக்க வேண்டும் என்பதும் இந்நிலையில் முக்கியமாக பேசப்படுகிறது.