தமிழக வெற்றிக் கழகத்தின் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருமான திரு. ஜி. பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது மொழிஞாயிறு ஞ. தேவநேயப் பாவாணர் எழுதிய புகழ்பெற்ற “தமிழர் வரலாறு” நூலை நினைவுப் பரிசாக வழங்கித் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இவர்களின் மக்கள் நலப் பணிகளும் சிந்தனைகளும் மென்மேலும் தொடர வேண்டும் எனப் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

“>

 

இந்தச் சந்திப்பின் சிறப்புமிக்க தருணங்கள் புகைப்படங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, தவெக முக்கிய நிர்வாகிகளின் இந்தச் சந்திப்பு தற்போது சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.