திருமண விழாக்களில் சிரிப்பு, மகிழ்ச்சி, ஆடல் என எல்லாம் சாதாரணம்தான். ஆனால், தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில், மணமகன் ஒருவர் நேராக மைக்கேல் ஜாக்சன் போல நடனம் ஆடி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த வீடியோவில் அவர் நிகழ்த்தும் பிரேக் டான்ஸ்  ஸ்டெப்புகள், பார்ப்பவர்களை “இது எந்த டான்ஸ் ஷோ?” என்று கேட்க வைக்கும் அளவுக்கு ஆச்சரியமாக உள்ளது.

இந்த வீடியோவில் பின்னணி இசை ஒன்று  ஒலிக்கிறது. அந்த இசையை கேட்டு உற்சாகமாக களத்தில்  நுழைந்த மணமகன், தனது கழுத்து, தோள்கள், முழங்கால் எல்லாமே முறிகிறதுபோல்..!  நடனம் ஆடி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். பின்னர் “மேலும் சில  வசனம் வரும் போதும், அவர் காட்டிய தன்னம்பிக்கை, தைரியம் பாராட்டத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by ⃪꯭꯭⎯꯭꯭꯭̽⎯꯭꯭̽❤‍🔥⃪꯭ ⃪꯭⃛🇳αткнαт= ⃪꯭⃛ ⃪⃪⃪⃨⃨⃜⃜⃜👑⃪꯭ᥫ᭡ (@aelex_0_007)

“>

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமிலும், X-லிலும்  பகிரப்பட்டதும், நெட்டிசன்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். “தம்பி, ஷெர்வானி கிழிஞ்சுடும், கொஞ்சம் சலோவா” என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

மற்றொருவர், “மணமகனுக்குள் மைக்கேல் ஜாக்சன் நுழைந்திருப்பாரா என்னவோ!” என்று கலாய்த்திருக்கிறார். “அற்புதமான டான்ஸ், ஆனா தவறான நாள்” என்பதே பலரின் கருத்து.

மணமகனின் நடன திறமைக்கு அனைவரும்  கைதட்டி உற்சாக செய்கிறனர்.. ஆனால், திருமண மேடையில் இந்த அளவுக்கு திறனைக் காட்டுவது ரொம்ப ‘அற்புதம் ’ என பலரும் நகைச்சுவையாக விமர்சிக்கின்றனர். ஒரு திருமண வீடியோவாக வந்த இந்த வீடியோ, இப்போது முழு சமூக வலைதளத்தையும் சீரும் சிரிப்பும் நிறைந்த சூழ்நிலையில் வைக்கிறது.