அமைச்சர் சேகர்பாபு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் அல்வா கொடுப்பதாகக் கூறியதாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,

“திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த அளவில், சொன்னதைத் தான் செய்கின்ற அரசு, செய்வதைத் தான் சொல்லுகின்ற அரசு, சொல்லாத பல வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிற அரசு. எடப்பாடி கொடுத்த அல்வாவால்தான் இன்று அந்த இயக்கங்கள் பல கோணங்களில் பயணம் செய்து கொண்டிருக்கின்றன.

அவர் அல்வா கொடுத்தார் என்பதை உணர்ந்துதான் செங்கோட்டையன் போன்றவர்கள் பிரிந்து நின்று எதிர்க் கருத்துக்களை ஆற்றிக் கொண்டிருக்கிறார். அல்வாவும் ஒரு வகையான உணவுதான். தேவைப்படுகின்ற இடத்தில் அதையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பரிமாறுவார்” என்று கூறியுள்ளார்