அமமுகவின் தலைவரான டிடிவி தினகரன், தற்போது புதிய அரசியல் முன்னணியை நோக்கி நகர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர், தமிழக வெற்றிக் கழக (TVK) தலைமையில், விஜய் தலைமையிலான புதிய வலுவான கூட்டணி உருவாகும் என அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, டிடிவி தினகரன் மற்றும் அவரது நெருக்கமானவர்கள், விஜய் தரப்பினருடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், தங்களது ஆதரவையும் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் அடிப்படையில், எதிர்வரும் தேர்தலில் தவெக கூட்டணியாகவும், விஜய் தலைமையிலான கூட்டணி தமிழக அரசியலில் முக்கிய பலமாக உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
