ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தகவல் பரவி வரும் நிலையில், ஈரானிய பெண் ஒருவர் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அந்தப் பெண் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் தனது நன்றியைத் தெரிவிப்பதோடு, “ஈரான் சுதந்திரம் பெறப்போகிறது” என்று கூறி உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுகிறார். இந்த வீடியோ ஈரானிய மக்கள் மற்றும் உலக நாடுகளிடையே ஒரு புதிய அரசியல் விவாதத்தைத் கிளப்பியுள்ளது.
Sharing this Video of an Iranian reacting to reports Khamenei is dead.
The Joy. The Tears. Indescribable.
Few understand what this means to millions of Iranians. My entire family fled Iran in 1979 because of this regime.
Thank You America.
Thank You Israel.
FREE IRAN.
🇮🇷🇺🇸🇮🇱 pic.twitter.com/ruZQMMpq3E— JeremyUnplugged (@JeremyUnplugged) March 1, 2026
இதற்கிடையில், ஈரானின் பல பகுதிகளில் மக்கள் தங்கள் வீட்டின் பால்கனிகளில் இருந்து வான வேடிக்கைகளை வெடித்தும், முழக்கங்களை எழுப்பியும் இந்த செய்தியைக் கொண்டாடி வருவதாகக் கூறப்படுகிறது. 1989 முதல் ஈரானை வழிநடத்தி வரும் காமேனி மரணம் தொடர்பாக, இந்த வீடியோக்கள் ஈரானிய சமூகத்தில் நிலவும் ஆழமான அரசியல் பிளவுகளையும், மாற்றத்திற்கான எதிர்பார்ப்பையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன.
