தூத்துக்குடி மாநகராட்சியில் 2026-27 ஆம் நிதி ஆண்டிற்கான சொத்துவரியை வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தும் பொதுமக்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா அறிவித்துள்ளார்.

இந்தச் சலுகையின் கீழ் அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை தள்ளுபடி பெற முடியும். பொதுமக்கள் சொத்துவரி மட்டுமின்றி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் கடை வாடகை போன்ற நிலுவைத் தொகைகளையும் உடனடியாக செலுத்தி மாநகராட்சி நிர்வாகத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வரி செலுத்துவதை எளிதாக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்கள் மாநகராட்சி வரி வசூல் மையங்களில் நேரடியாகவோ அல்லது செயலி மற்றும் என்ற இணையதளம் வாயிலாகவும் வரியைச் செலுத்தலாம். மேலும், கூகுள் பே, ஃபோன் பே போன்ற யுபிஐ செயலிகள் மூலமும் பணம் செலுத்தும் வசதி உள்ளது. வரி செலுத்துவோரின் செல்போன் எண்களை சொத்துவரி கணக்குடன் இணைக்கும் பணி நடைபெற்று வருவதால், பொதுமக்கள் தங்கள் சரியான எண்களைப் பதிவு செய்துள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.