தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு திட்டமிடப்பட்டிருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், பைபாஸ் சாலையில் வாகனத்தில் சென்று ‘ரோட் ஷோ’ நடத்தினார்.

அப்போது திடீரென வாகனத்திலிருந்து இறங்கிய விஜய், சைக்கிளில் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். அவரைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால் அந்த இடமே பரபரப்பாகக் காணப்பட்டது. ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகமானதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் தனது பிரசார வாகனத்திற்குத் திரும்பினார்.

விஜய் சைக்கிளை வேகமாக ஓட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு மத்திய அரசின் ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு அதிகாரிகள் அவர் பின்னால் ஓட முடியாமல் திணறும் காட்சிகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

“பாதுகாப்பு வளையத்தை மீறி விஜய் இப்படி வேகமாகச் செல்வது ஆபத்தானது; அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு?” என்று பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“>

 

ஒரு தலைவராக விஜய் இப்படிப் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் செயல்படுவது தவறு என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.