தூத்துக்குடியில் விஜய் வருகையையொட்டி, தவெகவினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

குறிப்பாக, பிரசாரம் நடைபெறும் இடங்களில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனுமதி வழங்கப்படும் இடங்களில் தவெக தொண்டர்கள் முறையாகவும், பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் திருச்சியில் ஏற்பட்ட நிலையில் போல, தேவையற்ற மற்றும் கட்டுப்பாடுகளைக் மீறிய செயல்பாடுகள் தொடர்ந்தால், போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கமாட்டோம் என்றும் கண்டிப்புடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விஜய் பங்கேற்கும் பிரசார நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில், முன்னதாகவே காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, உரிய மதிப்பீட்டுகளுக்குப்பின் மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் நலனையும், ஒழுங்கையும் கருத்தில் கொண்டு, இவ்வாறு முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், எந்தவொரு குழப்பமும் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.