உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை அவரது துணையே படுகொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி எரித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான பிரிஜ்பான் என்பவர், தன்னுடன் வசித்து வந்த பிரீதி (40) என்ற பெண்ணைக் கொலை செய்துள்ளார்.
கொலையை மறைக்க, ஒவ்வொரு நாளும் உடலின் ஒரு பகுதியை அவர் எறித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு, எரிக்கப்பட்டது போக மீதமிருந்த உடல் பாகங்களை ஒரு நீல நிறப் பெட்டியில் அடைத்துக்கொண்டு, ஆட்டோ ஒன்றில் அவர் எடுத்துச் சென்றுள்ளார்.
ஆட்டோவில் சென்றபோது அந்தப் பெட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியதோடு, அதிலிருந்து தண்ணீர் கசிவதைக் கண்ட ஆட்டோ ஓட்டுநருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்த பிரிஜ்பான், பாதியிலேயே ஆட்டோவை விட்டுத் தப்பி ஓடிவிட்டார்.
ஆட்டோ ஓட்டுநர் உடனடியாக அதிகாலை 2 மணியளவில் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்த போலீஸார், உள்ளே பாதி எரிந்த நிலையில் உடல் பாகங்கள் மற்றும் எலும்புகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
थाना सीपरी बाजार क्षेत्रान्तर्गत बक्से में मिले अधजले शव व हड्डियाँ प्राप्त होने पर तत्काल सुसंगत धाराओं में अभियोग पंजीकृत किया गया है, 03 संदिग्धों को हिरासत में लेकर पूछताछ की जा रही है। इस प्रकरण में की जा रही कार्यवाही के संबंध में पुलिस अधीक्षक नगर की बाइट pic.twitter.com/waXhro44Am
— Jhansi Police (@jhansipolice) January 18, 2026
“>
ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சிப்ரி பஜார் பகுதியில் இருந்த பிரிஜ்பானை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
