தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக மக்களுக்கு அரசு சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அனைவரும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் கூட்டுறவு துறை மூலம் 60% முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. வெளியில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பட்டாசு அரசு சார்பில் 300 முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் உங்களுக்கு 600 ரூபாய் மிச்சமாகும்.