விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் மின் நுகர்வோர் குறைகேற்பு மையம் திருவண்ணாமலைக்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடமாற்ற நடவடிக்கையைத் தடுத்து, நுகர்வோர் குறைகேற்பு மையம் தொடர்ந்துழுப்புரத்திலேயே செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் வலுத்து வந்தன.

இதனைத் தொடர்ந்து, நேற்று (28.08.26) தமிழக மின்சார மற்றும் சட்டம், நீதிமன்றங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்களை நேரில் சந்தித்து இதுகுறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. விழுப்புரத்தின் முக்கியத்துவத்தையும், பொதுமக்களின் வசதியையும் கருத்தில்கொண்டு குறைகேற்பு மையத்தை வேறு மாவட்டத்திற்கு மாற்றக் கூடாது என்று அந்தச் சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டது.

மக்களின் கோரிக்கையைக் கவனமாகக் கேட்ட மாண்புமிகு அமைச்சர், இது தொடர்பாக உரிய மற்றும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

“>

 

அமைச்சரின் இந்த நேர்மறையான உறுதிமொழிழுப்புர மாவட்ட மின் நுகர்வோர் மத்தியில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.