தனது வங்கிக் கணக்கில் ஜீரோ பேலன்ஸ் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். சிதம்பரம் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிடும் திருமாவளவனுக்கு சொந்தமாக ஒரு குண்டு மணி தங்கம், வெள்ளி கிடையாது. மேலும், அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.2 கோடியே 7 லட்சத்து 97 ஆயிரத்து 93 மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.28 லட்சத்து 62 ஆயிரத்து 500 ஆக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.