புதுச்சேரி மாநிலம் பனையடிகுப்பம் பகுதியில் ராஜகுரு (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக ஒரு இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவருடைய எதிர் வீட்டில் திருமணமான ஒரு இளம் பெண் தன் கணவனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜகுரு கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த இளம் பெண் குளிப்பதை மாடியிலிருந்து எட்டி பார்த்துள்ளார்.
இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் ராஜகுருவிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி அந்த வாலிபர் மோகன்ராஜ் என்பவரது மீன் குட்டையில் படுத்திருந்தார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரான தினேஷ் ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேர் அங்கு சென்றனர்.
அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த வாலிபரை எழுப்பி சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர். அவர் மீது பிளாஸ்டிக் நாற்காலி மற்றும் தடி உள்ளிட்ட பொருட்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்த ராஜ குரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தினேஷ் பாபு (27) மற்றும் அவரது நண்பர்கள் ஆன அச்சுதன் (24), சுமித் (20), முகிலன் (20), ஷர்மா (21) உள்ளிட்டோரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
