ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவர் கடந்து 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். அதன் பின் கணவன்- மனைவியிடையே நடைபெற்ற பிரச்சனை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி தனது கணவரை பிரிந்து உள்ளார்.
அதன் பின் ஐபிஎஸ் அதிகாரி அளித்த புகாரின் படி, அவருடைய கணவரும், மாமனாரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அவர்கள் இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரியின் கணவர் தனக்கு நீதி வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனு குறித்த வழக்கு நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதிகள், நீண்ட காலமாக நடந்து வரும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தீர்ப்பளித்தனர்.
அந்த வழக்கில் அரசியலமைப்பு சட்டத்தின் 142 பிரிவின் கீழ் இருவருக்கும் விவாகரத்து வழங்கினர். மேலும் இது தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது, கணவரின் குடும்பத்திற்கோ கணவருக்கோ எதிராக எதுவும் அதிகாரத்தை பயன்படுத்தி ஐபிஎஸ் அதிகாரி எதுவும் செய்யக்கூடாது.
மேலும் பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் அவரது முன்னாள் மாமனார் நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர். இதனிடையே ஐபிஎஸ் அதிகாரி ஜீவனாம்சம் வேண்டாம் என கூறியுள்ளார். அதனால் ஐகோர்ட் உத்தரவு தடை செய்யப்பட்டது.
