மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு 31 வயது பெண் அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு திருமணமான நிலையில் அவரது கணவர் வரதட்சணை வாங்கி வரும்படி அடிக்கடி கொடுமைப்படுத்தியுள்ளார். அதாவது காருக்கு 1.5 லட்சம் தவணை பணம் கட்ட வேண்டி இருந்த நிலையில் அதனை செலுத்துவதற்காக தன் மனைவியின் பெற்றோரிடம் இருந்து அந்த பணத்தை வாங்கி வரும்படி கணவன் கட்டாயப்படுத்தியுள்ளார். இவருடைய கணவரும் ஒரு அரசு ஊழியர் தான்.

பல நாட்களாக கணவன் தன் மனைவியை இவ்வாறு துன்பப்படுத்தி வந்த நிலையில் தன்னுடைய மனைவியின் நடவடிக்கைகளை கவனிக்க அவர் படுக்கையறையில் ஒரு ரகசிய கேமராவை பொருத்தியுள்ளார். இதேபோன்று பாத்ரூமில் கூட ஒரு ரகசிய கேமராவை வைத்துள்ளார். குளியலறையில் இருந்த ரகசிய கேமராவை எப்படியோ பார்த்த மனைவி படுக்கை அறையிலும் இருப்பதை கண்டுபிடித்தார்.

இதற்கு தன்னுடைய சைக்கோ கணவன்தான் காரணம் என்பதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தன்னுடைய கணவன், மாமியார் மற்றும் அவரின் 3 சகோதரிகள் அந்த சகோதரிகளின் இரண்டு கணவன்மார்கள் ஆகியோருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பணத்தை கொடுக்காவிடில் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று அந்த கணவன் மிரட்டியது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.