சமூக ஊடகங்களில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை குறித்தும், அங்கு திருமணத்துக்குப் பின் நடைமுறையில் உள்ள சடங்குகள் குறித்து  ஒரு பெண்மணி கூறும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு யூடுபில் (youtube) பேசிய பெண் ஒருவர், “ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் திருமணத்துக்குப் பிறகு முதலில் மாமனாரும், பின்னர் மைத்துனரும், அதன் பின்னர்தான் கணவனும் உடல் உறவு கொள்ள வேண்டும் என்ற பழக்கம் இருக்கிறது; மேலும், முதல் குழந்தையைக் கருக்கலைக்கும் வழக்கம் உள்ளது” என கூறி இருந்தார். இந்தக் கருத்து பலரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ வைரலானதும் பலரும் அதைப் பகிரத் தொடங்கினர். சிலர் அதை உண்மை என நம்பினாலும், பலர் அதனை பொய்யான தகவலாக கண்டித்தனர். இந்த நிலையில், தேசிய குற்ற விசாரணைப் பணிக்குழு (NCIB) சார்பில் பெண்மணி கூறிய இந்தக் கூற்றுக்கு புலனாய்வு நடத்தப்பட்டது.

அதன்படி, ராஜஸ்தான் முழுவதும் எந்தவிதமான பழக்கவழக்கமாகவோ, சடங்காகவோ இத்தகைய நடைமுறை இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டது. இது முற்றிலும் தவறான, பொய்யான மற்றும் பரபரப்புக்காக பரப்பப்பட்ட  தகவலாகும் எனவும் தெரிவித்துள்ளது.

“>

மேலும், NCIB தனது அதிகாரப்பூர்வ X -கணக்கில் வெளியிட்ட அறிக்கையில், “இத்தகைய வீடியோக்களை உருவாக்கி சமூகத்தில் கலகம் உண்டாக்கும் நோக்கில் இருப்பவர்களுக்கெதிராக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொது மக்களும் இத்தகைய பொய்யான தகவல்களில் நம்பிக்கை வைக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளது.

நெட்டிசன்களும் இந்த வீடியோவில் உள்ள பெண்ணுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒருவர், “நான் ராஜஸ்தானில் பிறந்தவன், இத்தகைய பழக்கம் என்னுடைய  வாழ்நாளில் கேள்விபட்டதே  இல்லை. பொய்யான தகவலுக்காக புகழ் தேடும் செயல் இது” என பதிவிட்டுள்ளார்.