உத்தரப்பிரதேச மாநில அரசு, சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. ‘No Helmet, No Fuel’ எனும் தலைப்பில், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் வழங்க தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் இதில் முழுமையாக ஒத்துழைக்குமாறு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் மற்றும் அனைத்து எரிபொருள் நிலையங்களும் இந்த திட்டத்திற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.