செப்டம்பர் மாதத்துக்கான வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மாநில வாரியான பண்டிகைகள் மற்றும் வார இறுதி விடுமுறைகள் அடிப்படையில் மொத்தம் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த விடுமுறை பட்டியலை முன்கூட்டியே அறிந்து, தங்களது பண பரிவர்த்தனைகளை திட்டமிடுவது அவசியம் என வங்கிகள் வலியுறுத்துகின்றன.
முக்கிய விடுமுறை தேதிகள் மற்றும் காரணங்கள்:
-
செப். 3 (புதன்) – கர்மா பூஜை: ஜார்கண்ட்
-
செப். 4 (வியாழன்) – முதல் ஓணம்: கேரளா
-
செப். 5 (வெள்ளி) – ஈத்-இ-மிலாத் / மிலாத்-உன்-நபி: தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள்
-
செப். 6 (சனி) – இந்திரஜாத்ரா: சிக்கிம், சத்தீஸ்கர்
-
செப். 12 (வெள்ளி) – பண்டிகை பின் விடுமுறை: ஜம்மு காஷ்மீர்
-
செப். 22 (திங்கள்) – நவராத்திரி ஸ்தாபனா: ராஜஸ்தான்
-
செப். 23 (செவ்வாய்) – மகாராஜா ஹரி சிங் பிறந்த நாள்: ஜம்மு காஷ்மீர்
-
செப். 29 (திங்கள்) – மகா சப்தமி / துர்கா பூஜை: திரிபுரா, மேற்கு வங்காளம்
-
செப். 30 (செவ்வாய்) – மகா அஷ்டமி: ஒடிசா, பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள்
வார இறுதி விடுமுறைகள்:
-
செப். 7, 14, 21, 28 – ஞாயிறு விடுமுறைகள்
-
செப். 13 – இரண்டாவது சனிக்கிழமை
-
செப். 27 – நான்காவது சனிக்கிழமை
இந்த மாதத்தில் பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகள் தத்தமது மாநிலத்துக்கேற்ப இவ்விடுமுறைகளை அனுசரிக்கின்றன. இருப்பினும், ஆன்லைன் வங்கி சேவைகள் (Net banking, UPI, Mobile banking) வழக்கம்போல செயல்படும் என்பதால், அவை மூலமாக பண பரிவர்த்தனைகள் செய்யலாம்.
வாடிக்கையாளர்கள், முக்கிய பண விவகாரங்களை இந்த விடுமுறைகள் ஏற்படுவதற்கு முன்பே முடித்துக்கொள்ளுமாறு வங்கிகள் கேட்டுக்கொண்டுள்ளன.
