திருமணம் என்பது ஒரு உறவின் ஆரம்பம் மட்டுமே. ஆனால் வாழ்நாள் முழுவதும் அன்பையும் புரிந்துணர்வையும் பங்கிடும் வாழ்க்கைத்துணை ஒரு ஆசீர்வாதம். இது பலருக்கே கிடைப்பதில்லை.
இந்நிலையில், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் ஒரு வயதான தம்பதியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, பலரின் கண்களில் கண்ணீர் வரும் அளவுக்கு உருக்கமான இடம்பிடித்துள்ளது. அந்த வீடியோவில், கணவரின் மடியில் தலைவைத்து அமைதியாக உறங்கும் மனைவி… அதை சற்று சாய்வாக தன் தோளில் சேர்த்து அன்புடன் தாங்கி பிடித்து நிற்கும் கணவர்… இதைக் கண்ட நெட்டிசன்கள் உணர்ச்சியை தடுக்க முடியாமல் வர்ணித்து வருகின்றனர்.
இந்த காதலான காட்சியில், வயதான தம்பதியின் உறவுக்கு வயது என்பது ஒரு தடையாக இல்லையென்பது தெளிவாகக் காணப்படுகிறது. காதல், பரிவு, கருணை இவையெல்லாம் இன்னும் அவர்களது உறவில் பசுமையாக காணப்படுகிறது.
“தம்பதிகளுக்கு வாழ்க்கையில் சண்டை, தகராறு இல்லையா? இருக்கலாம். ஆனால் அவர்களது காதல் குறையவில்லை என்பதற்கான நீதி இந்த நிமிட வீடியோவிலே இருக்கிறது,” என ரசிகர்கள் மனமகிழ்ந்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
இந்த வீடியோவை @rimjhim_aggarwal என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ளார். “இந்த காட்சி என் கண்களுக்கு என்றும் காணக்கிடைக்கவேண்டும்” என்ற பதிப்பில் பதிவிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 13 மில்லியன் பேர் பார்த்து 1.6 மில்லியனுக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
“இது எந்த ஒரு பள்ளி அல்லது ஆசிரியரால் கற்றுக்கொடுக்க முடியாத உண்மை காதல்” என ஒருவர் கூற, “அவர்கள் பணத்தில் ஏழையாக இருக்கலாம், ஆனால் காதலில் உலகின் பெரும் செல்வந்தர்கள்” என பலர் உணர்வுப்பூர்வமாக கருத்து தெரிவித்துள்ளனர். இக்காட்சி, உண்மையான பாசம் என்றால் என்ன என்பதை உலகுக்கு நினைவூட்டும் வகையில் உள்ளது.
