சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசின் 40 நாள் ஆட்சியை விமர்சித்து உரையாற்றி முடித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துப் பேசிய தவெக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், தனது 40 நிமிட அனல் பறக்கும் பதிலுரையின் கிளைமாக்ஸில், உதயநிதியின் ஒட்டுமொத்தப் பேச்சையும் ஒற்றை நொடியில் நக்கல் கலந்த கவுண்ட்டரால் காலி செய்துள்ளார்.
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தவெக-வின் 40 நாட்கள் ஆட்சியைத் தேடிப் பார்த்து ஏமாற்றம் அடைந்ததாகக் கூறினார், ஆனால் நான் இன்று இந்த அவையில் அவர் பேசிய ஒட்டுமொத்தப் பேச்சையும் தேடித் தேடிப் பார்த்தேன் என அமைச்சர் ராஜ்மோகன் வாதாடினார். மேலும் பேசிய அவர், ஆக்கப்பூர்வமாகவோ அல்லது அறிவியல் பூர்வமாகவோ எதையாவது சொல்வாரா என்று பார்த்தால், அதில் அரசியல் உள்நோக்கத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று சாடினார்.
அவர் 40 நாட்கள் தேடிப் பார்த்து ஏமாந்தார், ஆனால் நான் அவரது பேச்சைக் கேட்டு வெறும் 40 நிமிடத்திலேயே மொத்தமாக ஏமாற்றம் அடைந்துவிட்டேன் என்றும், இதை எப்படிச் சொல்ல வேண்டும் என்றால் நம் ஊரில் ஒரு பிரபலமான நகைச்சுவைக் காட்சியில் ‘அதுல ஒண்ணுமே இல்லை… கீழே போட்டுருங்க!’ என்று சொல்வார்களே, அந்த மாதிரிதான் இவருடைய 40 நிமிடப் பேச்சும் அமைந்திருந்தது என செம்ம லோக்கல் காமெடி கவுண்ட்டர் கொடுத்து அவையையே அதிர வைத்துள்ளார்.
