உத்தரப்பிரதேச மாநிலத்தின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த பர்வேசுடன் கடந்த ஆண்டு 23 வயதான குல் பிஸா என்ற பெண்ணுக்கு திருமணம் நடந்தது.
திருமணத்துக்குப் பிறகு பெண்ணின் மாமியாரும், கணவரும், குடும்பத்தினரும் தொடர்ந்து ₹10 லட்சம் பணம் மற்றும் கார் வரதட்சணை தருமாறு பலவந்தமாகக் கோரிக்கை வைத்து, அதற்காக அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்ததுள்ளனர். இது குறித்து குல் பிஸாவின் தந்தையான பூர்கான் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி, அந்தக் குடும்பத்தினரால் வலுக்கட்டாயமாக அமிலம் குடிக்க வைக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட குல் பிஸா, தொடர்ந்து 17 நாட்கள் உடல் உள்ளுறுப்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய பிறகு பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்தும், அவர் உயிரை காபாற்றமுடியாமல் உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் தொடர்பாக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக குல் பிஸாவின் கணவர் பர்வேசுடன் இணைந்து அவரது உறவினர்கள் உட்பட 7 பேர் மீது வரதட்சணை தடுப்பு சட்டம், கொலை உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
