அமெரிக்காவைச் சேர்ந்த வ்லாக்கர் ஒருவர் இந்தியாவில் சுற்றுலா பயணத்தில் ஒரு உணர்ச்சி மிகுந்த அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில், இந்திய டிரைவர் ஒருவரின் நேர்மை, பண்பாடு, அக்கறை ஆகியவை சமூக வலைதளங்களில் பாராட்பெற்றுள்ளது. குறிப்பாக, அந்த டிரைவர் தனது உழைப்புக்கு மட்டுமே பணம் வாங்கி, அதிகமாக வழங்கப்பட்ட ரூ.8,500-ஐ திருப்பிக் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில், “Surprising My Driver with a HUGE Tip” என்ற தலைப்பில், அமெரிக்க வ்லாக்கர் ஒருவர், “நான் உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?” என கேட்க, டிரைவர் மிக எளிமையாக, “நீங்கள் நியாயமா நினைக்கிறதை கொடுங்க…  1,250 தான்” என பதிலளிக்கிறார். அதற்குப் பிறகு, வ்லாக்கர் ரூ.8,500 பணத்தை கொடுக்கும் போது, அதைத் தவிர்த்து, தனக்கு சேரவேண்டிய  ரூ.1,250 மட்டும் வாங்கி, மீதி பணத்தை அவருக்கே திருப்பிக் கொடுக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Jay 🔴 IRL India (@jaystreazy)

“>

இந்த வீடியோவில் இடம் பெற்ற டிரைவர் ஒருவரின் நேர்மை சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. “இந்த உலகம் முழுக்க பல வஞ்சகர்கள் நடமாடும் நேரத்தில், இப்படியொரு மனிதனா..!!  என்பதே பெருமை”, “அவர் பணத்துக்காக இல்ல, பண்புக்காக வாழ்பவர்”, “அவரைப் போல ஒரு மனிதர்  ரொம்பவே ரேர்!” என மக்கள் பாராட்டி வருகின்றனர். உண்மையும், நேர்மையும் இன்னும் நம் சமூகத்தில் உயிரோடே இருப்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.