மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள பாச்சோரா நகரில், 25 வயது இளைஞர் ஒருவர் விடுதி ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் அந்த இளைஞருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து, திருமண வாழ்வை தொடங்க ஆவலுடன் காத்திருந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும் அந்த இளைஞர் விடுதிக்குச் சென்ற பின் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் உருவாக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விடுதி அறைக்கு விரைந்து சென்று இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த மரணத்தில் ஏதேனும் சதி உள்ளதா அல்லது தற்கொலையா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிச்சயதார்த்தம் முடிந்து மகிழ்ச்சியான எதிர்காலத்தை கனவு கண்ட இளைஞனின் உயிர், திருமணத்திற்கு முன்பே பாதியிலேயே பறிபோனது, அவரது குடும்பத்தாரை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
