இன்று சென்னையில் உள்ள வானகரத்தில் அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டார்கால். அதாவது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டப் பின்னர் நடக்கும் அதிமுகவின் முதல் செயற்குழு கூட்டம் இதுவே. இந்த கூட்டத்தில் மொத்தமாக 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த கூட்டத்தில் மேடையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, எடப்பாடி பழனிசாமியிடம் எம்.ஜி.ஆர்-ஐ பாருங்கள், அம்மாவை (ஜெயலலிதா) பாருங்கள் என கூறியுள்ளார். மேலும் திராவிட இயக்கத்தின் வாரிசாக எடப்பாடி திகழ்கிறார் என கூறியுள்ளார்.