மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்யும் நட்சத்திரங்களின் பட்டியலை திமுக சற்று முன் வெளியிட்டுள்ளது. இதில் நடிகர்கள் போஸ் வெங்கட், கருணாஸ், எழுத்தாளர் மதிமாறன், நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் வாசு விக்ரம் ஆகியோரிடம் பெற்றுள்ளனர். குறிப்பாக கருணாஸ் தென் தமிழகத்தில் முக்குலத்தோர் சமூக வாக்குகளை கவரும் வகையில் பரப்புரை மேற்கொள்கிறார்.