கோவையில் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பாஜகவினர் பிரசாரம் செய்ததை காவல்துறையிடம் முறையிட்ட திமுகவினரை 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் கும்பலாக இணைந்து விரட்டி விரட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், சிலருக்கு மண்டை உடைந்ததாகவும் கூறப்படுகிறது. பாஜக – திமுக மோதல் காரணமாக கோவையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது