தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் இன்று உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எக்ஸ் வலைப்பகுதியில் வெளியான ஒரு பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்தப் பதிவில், “ரோட்டைத் தோண்டிப் போட்டோம், வாடகை வேன்களைப் போக வேண்டாமென மிரட்டினோம், 5 கிலோமீட்டருக்கு மேல் நடக்க விட்டோம், விடுமுறை நாள் அனுமதி தராமல் வேலை நாளில் நடத்தச் சொன்னோம், நாற்காலி கூட தடை செய்தோம் – இருந்தாலும் என்னய்யா இத்தனை மக்கள் வெள்ளம்?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் “ஆள்பவர்கள் வயிறு வைக்கோல் போர் பற்றி எரிவது போல் எரிவதாக” பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாடு, தமிழக அரசியல் களத்தில் புதிய அலையை உருவாக்கியிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

https://twitter.com/itisprashanth/status/1958396536947355665