மதுரை பாரப்பத்தியில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்கிய தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு, தொண்டர்களின் உற்சாகத்துடன் நடைபெற்றது. மேடையில் இருந்த நிர்வாகிகளுக்கு மரியாதை செலுத்திய விஜய், தனது பெற்றோர்களை  மரியாதையுடன் இருக்கையில் அமரவைத்தார்.

பின்னர் ரேம்ப் வழியாக வந்த அவர், தொண்டர்கள் வீசிய துண்டுகளை கழுத்தில் போட்டுக்கொண்டு மகிழ்ச்சியுடன் நடந்தார். இந்த நேரத்தில் சிலர் தடுப்பைக் கடந்து மேடைக்கு வர முயற்சித்ததால் பவுன்சர்கள் துரித நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய விஜய், “2026ல் போட்டி ரெண்டு பேருக்குள்ள தான்… ஒன்னு தவெக… இன்னொன்னு திமுக” என்ற அவரது தீவிர அரசியல் விளக்கம், அரங்கம் முழுக்க ஆரவாரத்தை ஏற்படுத்தியது. இதனூடாக, அடுத்த தேர்தலில் திமுகவையே நேரடி எதிரியாகக் கொண்டு விஜய் தன்னம்பிக்கையுடன் தரையில் இறங்கியுள்ளார் என்பதை அழுத்தமாகத் தெரிவித்துள்ளார். இந்த வரிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.