மும்பை காட்கோபர் கிழக்குத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ பராக் ஷா, போக்குவரத்து விதிகளை மீறியதாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்கோபர் பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள கடைகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ நேரடியாக அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மகாத்மா காந்தி மார்க்கில் தவறான திசையில் ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுநரை வழிமறித்த பராக் ஷா, அவரை ஆவேசமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஒரு மக்கள் பிரதிநிதியே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சாமானிய குடிமகனைத் தாக்கியது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

“>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பராக் ஷா, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் ஆக்கிரமிப்புகள் மற்றும் விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதில் எவ்வித சமரசமும் கிடையாது என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். எனினும், ஒரு சட்டமன்ற உறுப்பினர் அதிகார துஷ்பிரயோகம் செய்து பொதுவெளியில் தாக்குதல் நடத்தியது ஜனநாயகத்திற்கு எதிரானது எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.