சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கீர்-சம்பா மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி பி.என்.பி, ஏ.டி.எம்.மில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அக்கல்டாரா பகுதியில் உள்ள மினி மாதா சௌக் ஏ.டி.எம் மையத்திற்கு சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை நிரப்ப இரண்டு பெண் ஊழியர்கள் சென்றுள்ளனர்.

அவர்கள் 7.50 லட்சம் ரூபாயை இயந்திரத்தில் வெற்றிகரமாகச் செலுத்திய நிலையில், மீதமுள்ள 50 ஆயிரம் ரூபாயுடன் அங்கிருந்தபோது, முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவன் திடீரென உள்ளே நுழைந்துள்ளார். அந்த நபர் பெண் ஊழியர்களின் கண்களில் ஒருவித ரசாயன ஸ்பிரேயை அடித்து, அவர்களை நிலைகுலையச் செய்துவிட்டு, கையில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார்.

“>

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏ.டி.எம் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இச்சம்பவம் வங்கி ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், குற்றவாளியைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.