கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதல் பெண் டிரைவராக பிரபலமானவர் ஷர்மிளா. இவர் பேருந்தை ஓட்டுவது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. கடந்த 2- ஆம் தேதி கோவை சத்தி ரோடு சங்கனூர் சந்திப்பு அருகே காரில் சென்றார். அப்போது ஷர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.

இதனால் பணியில் இருந்த காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி அது பற்றி விசாரித்துள்ளார். அதனை சர்மிளா வீடியோ எடுத்து தவறான தகவலுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ராஜேஸ்வரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஷர்மிளா மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.