உதகையை அடுத்த காந்தி நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவில் சிக்கி 6 பெண்கள் உட்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

நீலகிரி மாவட்டம் உதகையை  அடுத்த லவ் டேல் என்னும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான  கட்டுரை கட்டுமான பணிகள் தொடர்ந்து பல வாரங்களாக நடைபெற்று வருகிறது. பிஜ்ஜால் என்பவர் காந்தி நகரில் வீடு கட்டி வருகிறார்.
இந்த இடமானது நிலச்சரிவு அபாயம் மிக்க இடம் என பலமுறை அங்கு இருப்பவர்கள் புகார் கூறிய நிலையில், அந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் காலையில் 10க்கும் மேற்பட்டோர் பணி செய்துகொண்டிருந்தபோது திடீரென்று அங்கிருந்த தடுப்புச் சுவரானது முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது. தடுப்புச் சுவர் அமைத்த போது மண் சரிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது. அந்த சமயத்தில் 8 பெண்கள் பணிபுரிந்துள்ளனர். அந்த 8 பேர்களும் மண்ணில் புதைந்தனர். இதனையடுத்து  காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் ஜேசிபி இந்திரங்கள், அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்ணில் புதைந்த 6 நபர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 6 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கிட்டத்தட்ட 10 பேர் மண்ணில் புதைந்தனர். தொடர்ந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த மண் சரிவில் மொத்தம் 7 பேர் பலியாகியுள்ளனர். இதில் 6 பெண்கள், ஒரு ஆண் அடங்கும். மேலும் 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்கும் பணியில் காவல்துறை, தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் ஷகிலா, சங்கீதா, பாக்கியா, உமா, முத்துலட்சுமி உள்ளிட்ட 7 பேர் பலியாகினர்.