அதிமுகவுடன் பாமக கூட்டணி என்று வதந்தி பரப்ப வேண்டாம் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். கூட்டணிக்காக சில கட்சிகளுடன் பேசி வருவதாகவும் அது யார் என இப்போது சொல்ல முடியாது என்றும் கூறிய அன்புமணி ராமதாஸ், தற்போது வரை யாருடனும் கூட்டணி உறுதியாக வில்லை எனவும் கூறினார். ராமதாசை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்தது மரியாதை நிமித்தமானது என்றும் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் என்றும் கூறியுள்ளார்.