தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இந்நிலையில் தளபதி 68 அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெங்கட் பிரபுவிடம் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, தளபதி 68 அறிவிப்பு வரும்போது சும்மா தெறிக்கும் என அப்டேட் கொடுத்துள்ளார் . இதனால் தளபதி ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.