ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா…’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் ‘காவாலா…’ பாடலுக்கு நடனமாடிய காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ஒரு சில மணி நேரங்களில் 70,000க்கும் அதிகமான லைக்ஸ் குவித்துள்ளது.

மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர்.