விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஆலியா மானசா. இவருக்கு தற்போது மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தி பிரபலமான இவர் ராஜா ராணி சீரியலில் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

பிறகு அதே சீரியலில் இவர்கள் ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆலியா மானசா தற்போது திருமணத்திற்கு தயாராவது போல தன்னை அலங்கரித்துக் கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

alya_manasa இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@alya_manasa)