நடிகர் விஜய் தன்னுடைய இயக்கத்தின் மூலமாக கடந்த மாதம் தமிழகத்தில் 234 தொகுதிகளில் உள்ள அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தார். இதனால் விஜயின் செயல்பாடுகள் எல்லாமே அரசியல் வருவதற்கான முன்னேற்பாடுகளாக இருக்கிறது என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களோடு ஆலோசனை நடத்தினார். தொடர்ச்சியாக 3 நாட்கள் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடம் நேற்று ஆலோசனை நடத்திய அவர், அரசியலில் ஈடுபட்டால் சினிமாவில் நடிக்க மாட்டேன் எனக் கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மக்களின் ஆதரவையும், வரவேற்பையும் பார்க்க தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ள நடிகர் விஜய் விரும்புவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.