நடிகர் விஜய் தன்னுடைய இயக்கத்தின் மூலமாக கடந்த மாதம் தமிழகத்தில் 234 தொகுதிகளில் உள்ள அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தார். இதனால் விஜயின் செயல்பாடுகள் எல்லாமே அரசியல் வருவதற்கான முன்னேற்பாடுகளாக இருக்கிறது என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களோடு ஆலோசனை நடத்தினார். தொடர்ச்சியாக 3 நாட்கள் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

இந்நிலையில் நேற்று விஜய் வந்த காரானது நெளிந்து பழைய காராக இருந்தது ஏன்? விஜய் இந்த காரில் ஏன் வந்தார் என்று மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இதற்கான காரணம் என்னவென்றால் ஏழு ஆண்டுகள் பழமையான காராக அது இருந்தாலும் இது விஜயின் அதிர்ஷ்டமான கார் என்பது தெரியவந்துள்ளது.