தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இந்த பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அதே சமயம் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் அனைவரும் கட்டாயம் துணை தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு எழுதாத மாணவர்களை நேரில் அழைத்து ஆலோசனை வழங்கினார். இருந்தாலும் ஜூன் மாதம் நடைபெற்ற துணை தேர்வில் பல மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் வாழ்க்கை பாதிப்படைய கூடாது என்பதற்காக வருகின்ற ஜூலை 14ஆம் தேதி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு மேலாண்மை குழு கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் துணைத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் பெற்றோரை நேரில் அழைத்து உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். பெற்றோரிடம் மாணவர்கள் விரும்பும் படிப்பு குறித்து கேட்டறிந்து அதற்கான ஆலோசனைகள் பெற்றோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.