நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான வாகை சூடவா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். இந்த படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு, ராட்சசன் என 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் அண்மையில் வெளியான குரங்கு பெடல் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஜிப்ரான் தான் முஸ்லிம் மதத்திலிருந்து ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டதாக அறிவித்ததோடு தன்னுடைய பெயரையும் மாற்றிக் கொண்டதாக அறிவித்துள்ளார். அதன்படி ஜிப்ரான் வைபோதா என தன் பெயரை மாற்றியுள்ளார். மேலும் இனி தன்னுடைய பெயரை ஜிப்ரான் வைபோதா என்றே அனைத்து படங்களிலும் குறிப்பிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.