ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கி விடுமுறை நாட்கள் முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வங்கிகள் எத்தனை நாட்கள் இயங்கும் எத்தனை நாட்கள் இயங்காது என்பது குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அவ்வகையில் ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 11 நாட்களில் வங்கிகள் இயங்காது. மாதத்தின் தொடக்கமே சனிக்கிழமை தொடங்குவதால் மொத்தம் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன.

ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1 சனிக்கிழமை ஆண்டு கணக்கு முடிக்கும் நாள், ஏப்ரல் நான்கு செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 7 புனித வெள்ளி, ஏப்ரல் 8 மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை, ஏப்ரல் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 22 சனிக்கிழமை ரம்ஜான், நான்காவது சனிக்கிழமை ஆகிய நாட்கள் விடுமுறை. இவை தவிர்த்து ஐந்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகள் என்பதால் மொத்தம் 11 நாட்கள் வங்கிகள் இயங்காது.