தமிழகத்தில் சமீபத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் ஒரே அகாடமியை சேர்ந்த 2000 பேர் தேர்வாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியை சேர்ந்த ஒரு தனியார் கோச்சிங் அகாடமியில் இருந்து மட்டும் 2000 பேர் தேர்வாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் தகுதியின் அடிப்படையிலேயே தேர்வாகியுள்ளதாக அகாடமி விளக்கமளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரே அகாடமியை சேர்ந்த ஆறு பேர் முதல் 11 இடங்களை பிடித்துள்ளனர். கடலூரை மையமாகக் கொண்ட இந்த அகாடமி தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது.

ஆனால் உரையாட பயிற்சியின் மூலம் தான் தேர்வர்கள் வெற்றி பெற்றதாக அகாடமி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த  நிலையில் குரூப்-4 தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். குரூப் 4 மதிப்பெண் கணக்கீட்டுப் பணிகள் மென்பொருள் மூலம் செய்யப்பட்ட அதிகாரிகள் மூலம் நேரடி சரிபார்ப்பு நடைபெற்றது. மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அதிக காலம் எடுத்துக் கொண்டதாக கூறிய அதிகாரிகள் சரியான முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தவறு நடைபெற வாய்ப்பே இல்லை என்றும் உறுதியளித்துள்ளனர்.