மாநிலத்தில் வழக்கமான நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், எரிசக்தித் துறையின் அரசாங்க முதன்மைச் செயலாளராக பீலா ராஜேஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா மாற்றம் செய்யப்பட்டு சிறப்பு முயற்சிகள் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் பட்டு வளர்ப்பு இயக்குநர் ஜே.விஜயா ராணி இடமாற்றம் செய்யப்பட்டு, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார். இதுபோல் மொத்தம் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
