வாகனம் ஓட்டுபவர்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது மிக மிக அவசியம். அவ்வாறு கடைபிடிக்கவிட்டால் பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்தவகையில்  வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும் மது போதையில் வாகனம் ஓட்டினால் தற்போது 10,000 அபராதமாக விதிக்கப்படுவதாகவும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தற்போது சென்னையில் வேகமாக வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். பகலில் 40 கி.மீ வேகத்தை கடந்தும், இரவில் 50 கி.மீ வேகத்தை கடந்தும் வாகனம் ஓட்டிச் சென்றால் அதிவேக பயணம் என வழக்கு பதியப்படும் என்றும் இதற்காக ஸ்பீடு ரேடார் கருவி பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் தானியங்கி முறையில் வழக்குபதிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.