சென்னையில் கனமழை காரணமாக இன்று சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட வேண்டிய 7 ரயில்கள் மாற்றம் செய்யபட்டுள்ளது. அதன்படி, சென்னை வியாசர்பாடி – பேசின் பிரிட்ஜ் இடையே உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழைநீரால் தண்டவாளத்தின் கீழ் பகுதி தண்ணீரில் மூழ்கியுள்ளது. அந்த தடத்தில் ரயில்கள் இயங்க தடை விதிக்கப்பட்டு, மாற்று வழியில் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய திருப்பதி EXP, மும்பை சிஎஸ்டி EXP திருவள்ளூரில் இருந்தும்.
கோவை செல்லக்கூடிய இன்டர்சிட்டி EXP, பெங்களூர் செல்லக்கூடிய லால்பாக் EXP ஆவடியில் இருந்தும், கோவை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்தும் புறப்பட உள்ளது. மேலும், தண்டவாளத்தில் உள்ள தண்ணீரை அகற்றும் பணி 8 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது.
