தமிழகத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 15 ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பற்றிய கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும். இதற்கு ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24ம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு மே 25ஆம் தேதியும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 26 ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 29ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.